பதிவு செய்த நாள்
04
நவ
2017
12:11
ராசிபுரம்: ராசிபுரம், பெருமாள் கோவில் உண்டியலில், 57 ஆயிரத்து, 199 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக, செலுத்தியிருந்தனர். ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ளக்கோவில்களில் உள்ள உண்டியல் ஆண்டுக்கு மூன்று முறை திறப்பது வழக்கம். அதன்படி, கடந்த, ஜூன், 28ல் திறக்கப்பட்டது. புரட்டாசி முடிந்து வெள்ளிக்கிழமை, மீண்டும் திறக்கப்பட்டது. திருச்செங்கோடு, இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் சுந்தரம், ராசிபுரம் ஆய்வாளர் செல்வி, செயல் அலுவலர் ராஜகோபால் ஆகியோர் பங்கேற்றனர். பக்தர்கள், ஊழியர்கள் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ரொக்கமாக, 57 ஆயிரத்து, 199 ரூபாய் இருந்தது.