செஞ்சி: செஞ்சியில் மதுரகவி ஆழ்வார் சபை மாத மாநாடு நடந்தது. செஞ்சி வட்ட மதுரகவி ஆழ்வார் திருநட்சத்திர பரிபாலன சபையின் மாத மாநாடு ஏ.என்.ஏ., மினி ஹாலில் நடந்தது. சபை துணை தலைவர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். சபை தலைவர் வேணுகோபால் முன்னிலை வகித்தார். உறுப்பினர் கோவிந்தசாமி திருமால் துதிபாடினார். சரவணன் வரவேற்றார். கண்ணபிரான் பூச்சூட்டல் தலைப்பில் வளையசெட்டிகுளம் ரகுபதியும் முதலாழ்வார்கள் வைபவம் தலைப்பில் திண்டிவனம் நம்மாழ்வார் சபை தலைவர் வெங்கடேசன் சொற்பொறிவாற்றினார். சபை உறுப்பினர் சரவணா, ராஜகுமாரி, சங்கீதா மற்றும் பாகவதர்கள், ஆண்டாள் கோஷ்டியினர் கலந்து கொண்டனர். சபை உறுப்பினர் ராமதாஸ் நன்றி கூறினார்.