பதிவு செய்த நாள்
10
டிச
2011
12:12
பழநி : தமிழக- கேரள எல்லையில் பதட்டம் நிலவுவதால், ஏராளமான பக்தர்கள், பழநியில் இருமுடி பிரித்து விரதம் நிறைவு செய்கின்றனர். முல்லைப் பெரியாறு பிரச்னையால், குமுளி அருகே தமிழக எல்லையில் போக்குவரத்து பாதித்துள்ளது. திருப்பி விடப்பட்ட பக்தர்கள் சிலர், பழநி, பொள்ளாச்சி, பாலக்காடு வழி செல்கின்றனர். சிலர் பாதியில் விரதத்தை முடித்து ஊர் திரும்புகின்றனர். நேற்று முதல், பழநியில் வந்து மாலை கழற்றும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வழக்கமாக, ஐயப்ப பக்தர்களால், பழநி கோயிலில் கூட்டம் அதிகரிக்கும். தற்போது, விரதம் நிறைவு செய்ய, பக்தர்கள் குவிகின்றனர். பழநி தெற்கு கிரிவீதி ஐயப்பன் கோயிலில், இருமுடிகளை பிரித்து, விரதம் முடிக்கின்றனர். கொண்டு வரும் நெய் மூலம் சுவாமிக்கு அபிஷேகம் செய்கின்றனர்.