பதிவு செய்த நாள்
09
நவ
2017
01:11
சேலம்: சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நடந்துவருகிறது. சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவில், கடந்த, 6ல், ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது. இதையொட்டி, தினமும் மாலை, கோபுரத்துடன் கூடிய அலங்கார ஊஞ்சலில், சர்வ அலங்காரத்தில் சவுந்தரராஜர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும், 12ல், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் தம்பதி சமேதரராய் பெருமாள் ஊஞ்சலில் காட்சியளிப்பார். 15 வரை விழா நடக்கிறது.