Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் ... நஞ்சன்கூடு கோவிலில் சிறப்பு தரிசனத்தில் ரூ.3.15 லட்சம் வசூல் நஞ்சன்கூடு கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோமதீஸ்வரர் அபிஷேகத்தை தரிசிக்க சிறப்பு கண்ணாடி
எழுத்தின் அளவு:
கோமதீஸ்வரர் அபிஷேகத்தை தரிசிக்க சிறப்பு கண்ணாடி

பதிவு செய்த நாள்

15 நவ
2017
03:11

ஹாசன்: ஸ்ரவணபெலகோலா கோமதீஸ்வரர் மஹாமஸ்தாபிஷேகத்தை, பக்தர்கள் கண்டுகளிக்க, அதி நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஹாசன் மாவட்டம், ஸ்ரவணபெலகோலாவிலுள்ள கோமதீஸ்வரர் உருவச்சிலைக்கு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மஹாமஸ்தாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

பிப்ரவரியில், மஹா மஸ்தாபிஷேகம் நடக்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள், துரிதமாக நடந்து வருகின்றன. சாலைகள் சீரமைக்கப்படுகின்றன; அபிவிருத்தி பணிகள் நடக்கின்றன. கோமதீஸ்வரர் உருவச்சிலைக்கு நடத்தப்படும் அபிஷேகத்தை, பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, சிலையின் முன்பகுதியில், பிரம்மாண்ட மேடை அமைக்கப்படுகிறது. உலகின் வெவ்வேறு நாடுகளிலிருந்தும், மஹா மஸ்தாபிஷேகத்தை காண, லட்சக்கணக்கானோர் ஸ்ரவண பெலகோலாவுக்கு, வருகை தருவர். ஆனால், 10 ஆயிரம் முதல், 12 ஆயிரம் வரையிலானோர் மட்டுமே, விந்திய கிரி மலையில் ஏறி, பார்வையாளர்கள் மாடத்தில், மஸ்தாபிஷேகத்தை காண முடிகிறது. இம்முறை விந்தியகிரி மலையில், 58 அடி உயரம் கொண்ட, கோமதீஸ்வரர் சிலைக்கு செய்யப்படும் அபிஷேகம், அதி நவீனமான, ‘விர்சுவல் ரியாலிடி’ கண்ணாடி மூலமாக, நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

இதற்காக, 20 லட்சம் கண்ணாடிகள் வாங்கவும் ஆலோசிக்கிறது. இது தொடர்பாக, தனியார் நிறுவனங்களுடன், மாவட்ட நிர்வாகம் பேச்சு நடத்தி உள்ளது. பல நிறுவனங்கள், நேரடி ஒளிபரப்பு திட்டத்தில் பங்கேற்க, ஆர்வம் காண்பித்துள்ளன. இந்த தொழில்நுட்பத்தில், நேரடி ஒளி பரப்புவதற்கு வசதியாக இணைய தள சேவை வழங்கும்படி, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம், ஹாசன் மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. இணைய தள தொடர்பு, எவ்வித இடையூறும் இல்லாமல் கிடைத்தால், காட்சிகள், விர்சுவல் ரியாலிடி கண்ணாடி அணிந்தவர்களை, நொடி பொழுதில் சென்றடையும். இத்தகைய கண்ணாடி அணிந்தவர்களுக்கு, கோமதீஸ்வரர் சிலையின் தலை முதல், கால் வரை நடக்கும் அபிஷேகத்தை, நேரில் நின்று பார்த்த அனுபவம் கிடைக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி திவ்ய தரிசன நிகழ்வு, பராமரிப்பு பணிகளுக்காக, 5 ... மேலும்
 
temple news
சென்னை; ‘‘கோவில்களால் கலைகள் வளர்க்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு உள்ளன,’’ என, செம்மொழி தமிழாய்வு மத்திய ... மேலும்
 
temple news
 வயாலி காவல்,; திருப்பதி ஏழுமலையான் கோவில் போன்று, பெங்களூரு வயாலி காவலில் உள்ள திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருக்குறுங்குடி; திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் 9 நாட்கள் நடந்து வந்த பவித்ர உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar