பதிவு செய்த நாள்
18
நவ
2017
02:11
திருத்தணி : சுந்தர விநாயகர் கோவிலில், கார்த்திகை மாதம் முதல் நாளையொட்டி, நேற்று, சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. திருத்தணி, ம.பொ.சி., சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில், நேற்று கார்த்திகை மாத முதல் நாளை முன்னிட்டு, சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன.கோவில் வளாகத்தில், அதிகாலை, 5:00 மணிக்கு, யாகசாலையில், மூன்று கலசங்கள் அமைத்து, சிறப்பு ஹோமம் நடந்தது.தொடர்ந்து, மூலவர் சுந்தர விநாயகருக்கு பால், பன்னீர், தேன் மற்றும் பஞ்சாமிர்தம் போன்றவற்றால், சிறப்பு அபிஷேகம் நடந்தது.மாலையில், மூலவருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் நாளில், இது போல் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.