குருவித்துறை:குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் கார்த்திகை உற்சவத்தில் சுவாமி வீதிஉலா நடந்தது. கோயிலில் சந்தனமரத்தால் வடிவமைக்கப்பட்ட சுயம்பு சித்திர ரத வல்லப பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியர் தைலகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். கார்த்திகை உற்சவத்தை முன்னிட்டு பட்டர்கள் சடகோபர், ரங்கநாதர் உற்சவ மூர்த்தி பெருமாள் தேவியருக்கு 18 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம், தீபாராதனைகள் செய்தனர். பட்டுப்பல்லக்கில் வீதிஉலா வந்த சுவாமி, தேவியருக்கு பக்தர்கள் பூஜை செய்தனர். தக்கார் செல்வி, நிர்வாக அதிகாரி சர்க்கரையம்மாள், ஊழியர் வெங்கடேஷன் ஏற்பாடுகளை செய்தனர்.