பேரூர்: கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி சன்னிதியில் இருந்த கொடிமரம் சேதமடைந்தது. இதனால், கோவில் நிர்வாகத்தினர், புதிய கொடிமரம் அமைக்க முடிவு செய்தனர். உபயதாரர்கள் மூலமாக , ஆகம முறைப்படி தேக்குமரத்தில் புதிய கொடிமரம் தயார் செய்யப்பட்டது. கடந்த மாதம் பழைய கொடிமரத்திற்கு பாலாலயம் செய்யப்பட்டது. நேற்று காலை புதிய கொடிமரம் பிரதிஷ்டையையொட்டி, கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.