பொள்ளாச்சி;பொள்ளாச்சி வெங்கடேசா காலனி சாய்மதுரம் கோவிலில், சத்யசாய்பாபாவின், 92வது ஜெயந்தி விழாவையொட்டி, தினமும் காலை,ஓம்காரம், சுப்ரபாதம் நடைபெற்றன. நேற்று முன்தினம் ஜெயந்தி விழாவை யொட்டி, கணபதி ேஹாமம், தன்வந்திரி ேஹாமம் மற்றும் அன்னதானம் நடைபெற்றன.இதை தொடர்ந்து, பாலவிகாஸ் குழந்தைகளின் வேதபாராயணம் நடந்தது. புட்டபர்த்தி சத்யசாய் மிர்புரி இசைக்கல்லுாரி முன்னாள் மாணவர்கள், இறைவனோடு ஒரு இனிய இசை மாலைப்பொழுது என்ற தலைப்பில் கர்நாடக இசை மற்றும் சாய் பஜன் நிகழ்ச்சி நடத்தினர். இதன்பின், ஊஞ்சல் உற்வசம், மகா மங்கள ஆரத்தியும் நடந்தது. ஏற்பாடுகளை சத்ய சாய் சேவா சமிதியினர் செய்திருந்தனர்.