சவேரியார் ஆலய விழா துவங்கியது டிச. 2ல் நடக்கிறது தேர் பவனி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2017 12:11
விருதுநகர், விருதுநகர் பாண்டியன்நகர் சவேரியார் ஆலய விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி டிச.2ல் நடக்கிறது. நேற்று மாலை 6:30 மணிக்கு திருச்சி பிரான்சிஸ் சலேசியார் மறைபரப்பு சபை தலைவர் இன்னாசி முத்து, ஆலோசகர் சந்தியாகு, நாலாட்டின்புத்துார் பாதிரியார் அமிர்தராஜ், பாண்டியன்நகர் பாதிரியார் ஆரோக்கிய செல்வம், விருதுநகர் எஸ்.எப்.எஸ்., பள்ளி முதல்வர் அருள் பிரான்சிஸ், தாளாளர் மைக்கேல், பொருளாளர் ஜெயராஜ் உட்பட முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சவேரியார் கொடி ஏற்றம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதைதொடர்ந்து சிறப்பு திருப்பலி மற்றும் மறையுரை நடந்தது. இதன் பின் இசை ’சிடி’ வெளியீடும் நடந்தது. பத்துநாள் நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவின் ஒன்பதாம் நாளான டிச.2 மாலை 6:00 மணிக்கு விருதுநகர் மறைவட்ட அதிபர் பெனடிக்ட் ஆம்புரோஸ், துணைபாதிரியார் ஜான்பால் தலைமையில் திருப்பலி மற்றும் மறையுரை நடக்கிறது. தொடர்ந்து சவேரியார், லுார்து அன்னை, மிக்கேல் அதிதுாதர் தேர்பவனி நடக்க உள்ளது. பத்தாம்நாள் மாலை 6:00 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி, நற்கருணை பவனியும் நடைபெறுகிறது. தொடர்ந்துகொடியிறக்கம் நடக்கிறது.