Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெருந்துறையில் ருத்ர பூஜை விழா சபரிமலை செல்லும் பக்தர்களின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்: கலெக்டர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2017
12:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, மஹா தீப திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது, என, கலெக்டர் கந்தசாமி கூறினார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், டிச., 2 அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை காண, பல்வேறு பகுதிகளில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். இதையொட்டி அடிப்படை வசதி செய்தல் உட்பட அனைத்து பணிகளை, கலெக்டர் கந்தசாமி நேற்று ஆய்வு செய்தார். எஸ்.பி., பொன்னி, ஆர்.டி.ஓ., உமாமகேஸ்வரி உடனிருந்தனர்.

பின், நிருபர்களிடம் கலெக்டர் கந்தசாமி கூறியதாவது: தீப திருவிழாவுக்கு, 20 லட்சம் பக்தர்கள் வருவர். தற்காலிக பஸ் ஸ்டாண்ட்களில் நகராட்சி சார்பாக மேற்கொள்ளப்படும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தெற்கு ரயில்வே மூலம், திருநெல்வேலி, திருச்சி, சென்னை, விழுப்புரம், வேலூர் மார்க்கங்களிலிருந்து, ஒன்பது சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், 3,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 16 தற்காலிக பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து, பக்தர்களை கிரிவலப்பாதை வரை இலவசமாக அழைத்துச் செல்ல, 82 மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

வேலூர் சாலையில் உள்ள ஈசான்ய மைதானம், திருவண்ணாமலை மத்திய பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில், பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை இலவசமாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 15 ஆயிரம் கார்கள் நிற்கும் வகையில், 50 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. கிரிவலப்பாதையில், ஏழு இடங்களில் அன்னதானம் வழங்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை டவுன், கோவில் வளாகம், கிரிவலப்பாதை என, 43 இடங்களில், மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாட்டு சந்தை, குதிரை சந்தை, கார் பார்க்கிங், கழிவறை உள்ளிட்ட அனைத்திற்கும் கட்டணம் கிடையாது. 8,000 போலீசார், 35 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar