பதிவு செய்த நாள்
28
நவ
2017
01:11
குளித்தலை: குளித்தலை அடுத்த அய்யர்மலையில், கார்த்திகை மாத இரண்டாவது சோமவாரத்தில், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலையில் உள்ள, ரத்தினகிரீஸ்வர் உடனுறை சுரும்பார்குழலி அம்பாள் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த மலைக்கோவிலில், கார்த்திகை மாதம் திங்கட்கிழமை தோறும் சோமவர சிறப்பு பூஜை நடக்கிறது. இதன்படி, நேற்று அதிகாலையில் இருந்து, கோவில் குடிபாட்டுக்காரர்கள், பக்தர்கள் மலை ஏறி சுவாமி தரிசனம் செய்தனர். விவசாயிகள், சுவாமியை தரிசித்து, தங்கள் நிலத்தில் பயிரிட்ட தானியங்களைகோவில் தேர்ச் சக்கரம், மற்றும் பொன்னிடும் பாறையில் கொட்டி வழிபட்டனர்.