பதிவு செய்த நாள்
28
நவ
2017
01:11
விழுப்புரம்: விழுப்புரம் விராட்டிகுப்பம் பாதையில் உள்ள விநாயகர், தட்சணாமூர்த்தி, தேவிகருமாரியம்மன், துர்கை, முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, இரண்டாம் கால பூஜைகள், பூர்ணாஹூதி, தத்வார்ச்சனை, கடம்புறப்பாடு நடந்தது. தொடர்ந்து 8.45 மணிக்கு விநாயகர், தட்சணாமூர்த்தி, தேவிகருமாரியம்மன், துர்க்கை, முருகன் சுவாமிகளுக்கு, சீனிவாச சிவாச்சாரியார் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது. இரவு அம்மன் வீதியுலா நடந்தது.