பதிவு செய்த நாள்
29
நவ
2017
12:11
சேலம்: திருவண்ணாமலை, கார்த்திகை தீப திருவிழாவுக்காக, சேலத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் பாண்டி வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் டிச.,2ல், கார்த்திகை தீப விழா, அடுத்த நாள் பவுர்ணமி கிரிவலம் நடப்பதால், பக்தர்கள் வசதிக்காக, சேலம் கோட்டத்தில் இருந்து, திருவண்ணாமலைக்கு, டிச.,1ல் இருந்து, 3 வரை, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சேலத்தில் இருந்து, அரூர், ஊத்தங்கரை, ஆத்தூரில் இருந்து கள்ளக்குறிச்சி, நாமக்கல்லில் இருந்து, சேலம், அரூர், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, தருமபுரியில் இருந்து ஊத்தங்கரை வழியாக பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஓசூரில் இருந்து, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பென்னாகரம், பாலக்கோட்டில் இருந்து ஊத்தங்கரை, பெங்களூரில் இருந்து, ஓசூர் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை வழியாக, நெரிசலை தவிர்க்க சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.