பதிவு செய்த நாள்
29
நவ
2017
12:11
சென்னிமலை: ஈங்கூர் ஐயப்பன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா, டிச.,1ல் நடக்கிறது. சென்னிமலை அடுத்த ஈங்கூரில், தர்மசாஸ்தா திருக்கோவில் என்ற பெயரில், ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு மஹா கும்பாபிஷேக விழா, டிச., 1ல் நடக்கிறது. இதையொட்டி இன்றிரவு, 9:00 மணிக்கு கிராமசாந்தி நடக்கிறது. நாளை காலை, 8:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு தீர்த்த குடங்கள், முளைப்பாலிகை ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. இரவில் முதல்கால யாக வேள்வி பூஜை தொடங்குகிறது. அஷ்டபந்தன மருந்து சாற்றுதலை தொடர்ந்து, பிரமாண்ட வாணவேடிக்கை நடக்கிறது. டிச.,1ல் காலை, 8: 00 மணிக்கு மேல், 9:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, தச தரிசனம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் மற்றும் அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை, ஈங்கூர் தர்மசாஸ்தா பக்தர்கள் குழுவினர் செய்கின்றனர்.