பதிவு செய்த நாள்
30
நவ
2017
01:11
பந்தலுார் : பந்தலுார் ஹட்டியில் உள்ள பகவதி அம்மன் கோவிலின் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஒரு கட்டமாக, கோவிலின் உத்திரம் அமைத்தல் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு நடந்த பூஜைக்கு பணிதரன் நம்பூதிரி தலைமை வகித்தார். பிரகாசன் ஆசாரி முன்னிலை வகித்தார். வேலாயுதன்ஆசாரி பூஜைகளை செய்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் கோவில் உத்திரம் அமைக்கப்பட்டது. நிர்வாகிகள் கூறுகையில், ’கோவில் மேற்கூரையில் செம்புதகடு பதித்தல் நிகழ்வு நடைபெற உள்ளதால், அதற்கான ஒத்துழைப்பையும் பொதுமக்கள் வழங்க வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், பந்தலுார் ஹட்டி, தேவாலா, நந்தட்டி, கொளப்பள்ளி, சோலாடி, மாரக்கரா அட்டி பகுதிகளை சேர்ந்த மக்களும், பந்தலுார் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.