பதிவு செய்த நாள்
01
டிச
2017
12:12
குருஷேத்திரம்: ஹரியானா மாநிலம் குருஷேத்திரத்தில், ’உலக கீதை பாடம்’ என்னும் நிகழ்ச்சியை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் துவக்கி வைத்தார். அதன் நிறைவு விழா நேற்று நடந்தது. அதில், 18 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர்கள், நேற்று பகல், 12:00 மணி முதல், 12:15வரை, கீதை சுலோகங்களை படித்து, உலக சாதனை படைத்தனர். இந்நிகழ்ச்சியில், முதல்வர் கட்டார், மத்திய அமைச்சர் உமா பாரதி ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் வீடியோ பதிவு, உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்வதற்காக, கின்னஸ் புத்தக நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.