பதிவு செய்த நாள்
01
டிச
2017
12:12
சூலுார்: காங்கயம்பாளையம் ஐயப்பன் கோவிலில் அகண்ட நாம ஜபம் நடந்தது. சூலுார் அடுத்த காங்கயம்பாளையத்தில், பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு, கார்த்திகை மாத மண்டல மகர விளக்கு திருவிழா கடந்த, 16ம் தேதி துவங்கியது; லட்சார்ச்சணை நடந்தது. நவ., 26ம் தேதி காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, அகண்ட நாம ஜபம் நடந்தது. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். திருவிழாவை முன்னிட்டு, தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. டிச., 24, 25ம் தேதி, ஐயப்ப சுவாமியின் அலங்கார ஊர்வலம் நடக்கிறது. முன்னதாக பறையெடுப்பு மற்றும் செண்டை வாத்திய நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.