பரமக்குடி, பரமக்குடி நகராட்சி அருகே சப்தகன்னிமார் அம்மன், கருப்பண்ணசுவாமி கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. நவ. 27 காலை 6:00 மணிக்கு அனுக்கை, மகாலட்சுமி,நவ கிரக ேஹாமமும் நடந்தன. மறுநாள் காலை 8:00 மணிக்கு கோபூஜை, வைகை ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு யாகசாலை பிரவேசம் நடந்தது. நேற்று காலை 4ம் காலயாக பூஜை, மகாபூர்ணாகுதியுடன் நிறைவடைந்தது தொடர்ந்து யாத்ராதானம், கும்ப குடங்கள் கோயிலை வலம் வந்து காலை 11:00 மணிக்கு விமானங்களுக்கு கும்பாபிேஷகம் நடந்தது.