பதிவு செய்த நாள்
05
டிச
2017
12:12
ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி சுற்றுவட்டார முனியப்பன் கோவில்களில், பழம் படைத்தல் விழா கொண்டாடப்பட்டது. கார்த்திகை திங்களையொட்டி, ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள பெரிய முனியப்பன்; திருச்செங்கோடு சாலை சடைமுனியப்பன்; ராசிபுரம் சாலை ஏரிக்கரை முனியப்பன்; சேலம் சாலை முனியப்பன் ஆகிய கோவில்களில், நேற்று, பழம் படைத்தல் விழா நடந்தது. இதற்காக, முனியப்பனை குலதெய்வமாக கொண்ட பங்காளிகள் குடும்பத்தினர், காலையில் குடும்பத்தினருடன், கோவில்களுக்கு வந்து, சுவாமியை சுத்தம் செய்து, மாலை அணிவித்து, தேங்காய், வாழைப்பழங்களை படைத்து, சிறப்பு பூஜை செய்தனர்.