விரதமிருக்கும் ஆண் பக்தர்களை ஐயப்பா சுவாமி என்று அழைப்பது வழக்கம். கண்ணில் காணும் அனைத்தையும் ஐயப்பனாகவே கருதுவதால் ஐயப்பன் என்று குறிப்பிடுகிறோம். ஆண்களைப் போலவே பெண்களும் விரதம் மேற்கொள்வர். ஆனால், இவர்கள் 10வயதுக்கு உட்பட்டவராகவோ அல்லது 50வயதுக்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும் என்ற நியதி இருக்கிறது. பெண் பக்தர்களை மாளிகைப்புறம் என்று அழைப்பர். ஐயப்பன் கோயில் அருகிலுள்ள மாளிகைப் புறத்தம்மனின் பெயரால், அவர்களை இவ்வாறு அழைக்கின்றனர்.