ராமநாதபுரம்:பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தின் 80வது ஆண்டு விழாவையொட்டி, ராமநாதபுரத்தில் டிச.,15ல் உலக நன்மைக்காக 300 பெண்கள் தீபம் ஏற்றி தியானம் செய்கின்றனர்.ராமநாதபுரம் கிளை நிலைய பொறுப்பாளர் ராஜலட்சுமி கூறியது: பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தின் 80வது ஆண்டு விழாவை, இந்த ஆண்டு அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கான இறை ஞானம், என்ற தலைப்பில் கொண்டாடுகின்றோம். மநாதபுரம் என்.ஆர்.மஹாலில் டிச.,15 மாலை 5:00 மணிக்கு ஆண்டு விழா நடக்கிறது.கடந்த 80 ஆண்டுகளாக இறைபணி ஆற்றி வருகிறோம். உலகம் முழுவதும் உள்ள 4000 கிளை நிலையங்களில் ஒன்று ராமநாதபுரத்தில் செயல்படுகிறது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பிரம்மகுமாரிகள், குமாரர்கள் உள்ளனர்.ராமநாதபுரத்தில் நடக்கும் விழாவில், பிரம்மகுமாரிகள் மதுரை துணை மண்டல இயக்குனர் ராஜயோகினி மீனாட்சி ஆசியுரை வழங்குகிறார். பிரம்மா குமாரர் ஜெயக்குமார், உமா தியான அனுபவம் குறித்து பேசுகின்றனர்.கூடுதல் மாவட்ட நீதிபதி லிங்கேஸ்வரன், மாவட்ட எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கின்றனர்.நிகழ்ச்சியில் உலக நன்மைக்காக300 பெண்கள் தீபம் ஏற்றி தியானம் செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இவ்வாறு கூறினார்.