பதிவு செய்த நாள்
13
டிச
2017
12:12
பெ.நா.பாளையம்;கோவை சின்னத்தடாகம் அருகே உள்ள, நஞ்சுண்டாபுரம் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.நஞ்சுண்டாபுரத்தில் இருந்த மாரியம்மன், மாகாளியம்மன் கோவிலை புதுப்பித்து, கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானை உடனமர் சிங்காரவேலர், மாரியம்மன், மாகாளியம்மன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு, விமானத்துடன் கூடிய புதிய திருக்கோவில்கள் அமைத்து அமுது மடம், வாகன மண்டபம், அரசடி விநாயகர் மேடை மற்றும் மதில்கள் கட்டப்பட்டுள்ளன. கோவில் கும்பாபிேஷகம் கடந்த மாதம், 29ல் நடந்தது. தொடர்ந்து, கால் மண்டல பூஜைகள் தினமும் நடந்தன.
நிறைவு விழா, நேற்று முன்தினம் மாலை நடந்தது. விழாவையொட்டி கணபதி ேஹாமம், சிறப்பு பூஜைகள் நடந்தன. மாரியம்மன், மாகாளியம்மன், விநாயகர், முருகர் வள்ளி- தெய்வானை மலர் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிறப்பு பஜனையும் நடந்தது. விழா ஏற்பாடுகளை, விழாக்குழு தலைவர் துரைசாமி, துணை தலைவர் ஆனந்தன், செயலாளர் ரவி, உதவி செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் சந்திரமோகன் ஆகியோர் செய்து இருந்தனர்.