சபரிமலை: சபரிமலையில் வளர்ச்சி பணிகளை மாஸ்டர் பிளான் கமிட்டி முடிவு செய்கிறது. தற்போது 99.99 கோடி ரூபாய் செலவில் 26 திட்டங்களுக்கு கமிட்டி வடிவம் கொடுத்துள்ளது.
இதன்படி சன்னிதானத்தில் புதிய பிரசாத கவுன்டர், பக்தர்கள் வரிசையில் நிற்கும் பகுதி, குடிநீர் சுத்திகரிப்பு மையம், இரண்டாயிரம் பக்தர்கள் தங்கும் மையம், சுகாதார மையங்கள் அமைக்கப்படும். பம்பை- சன்னிதானம் பாதையில் நீலிமலை, அப்பாச்சிமேடு ஆகிய இடங்களில் புதிதாக படிக்கட்டுகள் கட்டப்படும். டிராக்டர் செல்வதற்கு பாதைகள் அமைக்கப்படும். இத்திட்டங்களுக்கு சன்னிதானத்தில் நடந்த சபரிமலை உயர் அதிகார குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.