பதிவு செய்த நாள்
16
டிச
2011
11:12
கடையநல்லூர் : செங்கோட்டை ஒன்றிய பகுதிகளில் உள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் நடத்திட 15 லட்சம் ரூபாய் முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்திருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-கன்னியாகுமரி மாவட்ட அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோவில்கள் இலத்தூர், அச்சன்புதூர், கற்குடி, புளியரை, கம்பிளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. இத்திருக்கோவில்களில் திருப்பணிகள் மற்றும் புதிய கட்டடங்கள் மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா 15 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். செங்கோட்டை ஒன்றியம் கிளாங்காடு பாலஉடையார்சாஸ்தா கோவிலுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், இலத்தூர் ஆதீனம்காத்தவர் கோயிலுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும், பால மார்த்தாண்டபுரம் விநாயகர் கோயிலுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும், கம்பிளி மலையுடையார் சாஸ்தா மற்றும் செண்பக விநாயகர் கோயிலுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் திருப்பணிக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.அச்சன்புதூர் விநாயகர் கோயில் பராமரிப்பிற்காக ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், கற்குடி நீலியம்மன் கோயிலில் மடப்பள்ளி அமைக்க ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும், ஆய்க்குடி உலகம்மன் கோவிலில் மடப்பள்ளி அமைக்க ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும், புளியரை தட்சிணாமூர்த்தி கோயிலில் அலுவலகம், கார் பார்க்கிங் அமைக்க 7 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.செங்கோட்டை பகுதிகளில் அமைந்துள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மற்றும் புதிய கட்டடங்கள் கட்ட 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு செங்கோட்டை ஒன்றிய செயலாளரும், ஆய்க்குடி டவுன் பஞ்.,துணைதலைவருமான செல்லப்பன், அச்சன்புதூர் டவுன் பஞ்.,தலைவர் டாக்டர் சுசீகரன், ஆய்க்குடி டவுன் பஞ்.,தலைவர் குட்டியம்மாள், செயலாளர் முத்துக்குட்டி மற்றும் அ.தி.மு.க.,நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.