காளையார்கோவில் : முடிக்கரை ஊராட்சிக்குட்பட்ட பொருசடி உடைப்பு கிராமத்தில் தர்மமுனீஸ்வரர் கோவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு இக்கிராமத்தினர் காளை மாட்டை சூலம் பதித்து கோவிலுக்கு விட்டனர்.இக்கோவில் காளை மஞ்சு விரட்டில் பிடிபட்டது கிடையாது. சீறீபாய்ந்த இந்த காளை நோய்வாய்பட்டு நேற்று இறந்தது. கிராமத்து சாவடி முன் காளைக்கு மாலை மரியாதை செய்து மஞ்சுவிரட்டு தொழுவம் முன்பு புதைத்தனர்.