பதிவு செய்த நாள்
19
டிச
2017
03:12
சென்னிமலை: சென்னிமலை காமாட்சியம்மன் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழாவினை முன்னிட்டு லட்சார்ச்சனை நடந்தது. நேற்று காலை தொடங்கி, 12:30 மணி வரை நடந்தது. பின், மாலை, 4:00 மணிக்கு தொடங்கி, இரவு, 7:30க்கு லட்சார்ச்சனை பூர்த்தி பெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை நட்சத்திர ?ஹாமம், சனி பாகவானுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடக்கிறது.
*சென்னிமலை, கைலாசநாதர் கோவிலில், இன்று காலை, சனி பெயர்ச்சி விழா நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு சிறப்பு பூஜை துவங்கி, சனீஸ்வர பகவானுக்கு யாக பூஜை, சிறப்பு அபிஷேக பூஜை நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு மஹா தீபாராதனை நடக்கிறது.
* முருங்கத்தொழுவு பிரமலிங்கேஸ்வரர் கோவிலில் சனிபெயர்ச்சி விழா யாகசாலை பூஜை, இன்று காலை, 7:00 மணிக்கு தொடங்கி, 10:30 மணிக்கு நிறைவு பெறுகிறது.