கூடலுார்;கூடலுார் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஐயப்பன் ரத ஊர்வலம் நடந்தது. பிள்ளையார் கோயிலில் இருந்து காமாட்சியம்மன் கோயில் தெரு, மெயின் பஜார் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் பிள்ளையார் கோயிலில் முடிந்தது. இதற்கான ஏற்பாட்டை சேவா சங்க நிர்வாகிகள், ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து கோயிலில் சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.