அன்னுார்;அன்னுார் பெருமாள் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. அன்னுார், ஸ்ரீதேவி பூதேவி சமேதர கரிவரத ராஜப்பெருமாள் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, அனுமன் விஸ்வரூப தரிசனம், திருமஞ்சனம், சகஸ்ரநாம அர்ச்சனைகள் நடந்தன. அனுமனுக்கு வடை மாலை சாற்றப்பட்டு, நடந்த சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.