பரமக்குடி தர்மசாஸ்தா கோயிலில் டிச.25ல் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2017 01:12
பரமக்குடி, பரமக்குடி தர்மசாஸ்தா கோயிலில் ஐயப்ப சுவாமி - புஷ்கலா தேவி திருக்கல்யாணம் டிச., 25ம் தேதி நடக்கிறது. பரமக்குடி தரைப்பாலம் அருகில் தர்மசாஸ்தாகோயில் உள்ளது. இங்கு கேரள மாநிலம் ஆரியங்காவு ஐயப்ப சுவாமி கோயிலில் நடப்பது போன்றே ஒவ்வொரு ஆண்டும் திருக்கல்யாணம்நடக்கும்.பரமக்குடி ஐயப்பசுவாமி கோயிலில் டிச., 24ம் தேதி இரவு 7:00மணிக்கு தர்மசாஸ்தா, புஷ்கலாதேவி நிச்சயதார்த்தம், அபிேஷகம், தீபா ராதனை நடைபெறும். தொடர்ந்து மறுநாள் காலை 8:00 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலமும், 10:30 மணிக்கு சுவாமி, தாயார் ஊஞ்சலில் திருக்கல்யாணம் நடக்கவுள்ளது. அன்று மதியம் அன்னதானம், இரவு பட்டுப்பல்லக்கில் பட்டண பிரவேசம்நடைபெறும். தொடர்ந்து டிச. 26 ல் மண்டல பூஜையையொட்டி 108 சங்காபிேஷகம், வீதியுலா நடக்கும்.