கன்னிவாடி தருமத்துப்பட்டி அருகே காரமடையில், ராமலிங்கசுவாமிகள் அன்னதான மடம் உள்ளது. தைப்பூசம், பங்குனி உத்திர பாதயாத்திரை, கோடை காலங்களில் சேவை நோக்குடன் தண்ணீர் பந்தல், அன்னதான விா நடக்கும். கார்த்திகை மாத உத்திரம் நட்சத்திரத்தில் குருபூஜை நடைபெறும். இந்தாண்டு குருபூஜை விழா துவங்கியது. தேவார, திருவாசக பாராயணத்துடன், சிறப்பு வழிபாடு நடந்தது. சுவாமிக்கு தீர்த்தாபிேஷகம் நடந்தது. விசேஷ சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானம், ஆன்மிக சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.