பதிவு செய்த நாள்
17
டிச
2011
11:12
பழநி : மார்கழி பூஜைக்காக, இன்று முதல் ஜன., 19 வரை, பழநி மலைக் கோயில் சன்னதி, அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும். இன்று மார்கழி பிறக்கிறது. திருப்பள்ளி எழுச்சிக்காக பழநி கோயிலில், அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி சிறப்பு பூஜை நடக்கும். ஜன., 14 ல் மார்கழி நிறைவடைகிறது. ஆனால், ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, ஜன., 19 வரை அதிகாலையில் சன்னதி திறக்கப்படும். திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில்களில் அதிகாலை 4 மணிக்கும்; மாரியம்மன், பெரியாவுடையார் கோயில்களில் 5 மணிக்கு திறக்கப்படும்.