ராமேஸ்வரம் : மார்கழி மாத பிறப்பையொட்டி ராமேஸ்வரம் கோயில் நடை இன்று காலை 3 மணிக்கு திறக்கப்படும். நாளை காலை 7 முதல் பகல் 11.30 மணி வரை நடை சாத்தப்பட்டிருக்கும். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு இன்று முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4 முதல் 5 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை, காலை 5.30 மணிக்கு திருப்பலி எழுச்சியுடன் தொடர்ந்து காலபூஜைகள் நடக்கிறது. நடை திறப்பு நேரம், பூஜை முறைகள் ஜன.,14 வரை அமுலில் இருக்கும். நாளை(டிச.,18ம் தேதி) அஷ்டமி பிரதர்சனத்தையொட்டி இரவு 2 மணிக்கு கோயில் நடை திறந்து, 2.30 முதல் 3.30 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடக்கிறது. காலை 7 மணிக்கு சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு நடக்கிறது. காலை 7 முதல் 11.30 மணி வரை கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.