பதிவு செய்த நாள்
27
டிச
2017
02:12
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளிடம் ஆட்டோ டிரைவர்கள சிலர் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பக்தர்கள் வேதனை அடைகின்றனர்.
தற்போது பள்ளி விடுமுறை என்பதால் டிச.,23 முதல் ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள், ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியதும் வாடகை ஆட்டோவில் கோயில் மற்றும் தங்கும் விடுதிக்கு செல்கின்றனர்.கோயிலில் தரிசனம் முடித்த பக்தர்கள், சுற்றுலா பயணிக ளை தேடி செல்லும் ஆட்டோ டிரைவர்கள், தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை (22கி.மீ.,), அப்துல்கலாம் நினைவகம்(5 கி.மீ.,), ராமர்பாதம் கோயில் (2 கி.மீ.,) செல்ல ரூபாய் 1600ம் அல்லது ஒரு நபருக்கு ரூபாய்200 வரை வசூலித்து, வரம்பு மீறி ஒரு ஆட்டோவில் 10 பேரை ஏற்றி ஆபத்தான சவாரி செய்கின்றனர்.
சுற்றுலா தலத்தை காணும் ஆவலில் ஆட்டோ டிரைவர்கள் கேட்கும் கட்டணத்தை பயணிகள் கொடுக்கும் அவலம் உள்ளது.
ராமேஸ்வரத்தில்இருந்து மேற்கண்ட சுற்றுலா இடங்களுக்கு சென்று வர 58 கி.மீ., தூரத்திற்கு அதிகபட்சம் 4 லிட்டர் டீசல், 3 மணி நேரபயணத்திற்கு(காத்திருப்பு கட்டணம் உட்பட) ரூபாய் 500 முதல் 600 வரை நிர்ணயிக்கலாம். ஆனால் தற்போது பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி ரூபாய் 1600 முதல் 2000 வரை வசூலிப்பதாக பயணிகள் புகார் கூறுகின்றனர். வழக்கமாக விடு முறை இல்லாத பிற நாளில் ரூபாய் 900 முதல் 1200 வரைவசூலிப்பார்கள்.
பக்தர்கள் நலன் கருதி ராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட சுற்றுலா தலம், கோயிலுக்கு செல்ல ஆட்டோ, வேனுக்கு கட்டணம் நிர்ணயித்து, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், கோயில் அருகே தகவல் பலகை வைத்து, ஆன் லைனில் கட்டணம் விவரத்தை வெளியிட ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.