கீழக்கரை:சேதுக்கரையில் பக்தர்கள் புனித நீராடும் கடற்கரை பகுதியில்விட்டுச்சென்ற கழிவுகள், குப்பையை அகற்றி, துாய்மை செய்யும் பணி நடந்தது. மன்னார் வளைகுடா காப்பக அறக்கட்டளையின்சார்பில் கிராம கடல் பாதுகாப்பு சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்குழுவின் உறுப்பினர்கள், திட்ட களப்பணியாளர்களால் அகற்றப்பட்டது. சேதுக்கரையில் உள்ள கடைகளில் குப்பைத்தொட்டிகளை வைத்துக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. கடற்கரையில் குப்பை துணிகளை போட வேண்டாம் என்றும் கடல்வாழ் உயிரினங்கள், பவளப்பாறைகளின் முக்கியத்துவம் குறித்தும் சுற்றுலா பயணிகளிடம் கூறப்பட்டது. மண்டல அலுவலர் பா.ஜெபஸ் தலைமை வகித்தார்.துணை அலுவலர் அருண்பிரகாஷ் ஆகி யோர் பங்கேற்றனர். திட்ட களப்பணியாளர் காளியம்மாள் ஏற்பாடுகளை செய்திருந்தார்.