அரூரில், கரியபெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2017 05:12
அரூர்: அரூரில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள் கோவிலில், டிச.29-ல்., அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அரூர், பழையபேட்டை கரிய பெருமாள் கோவிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை, 4:50 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தி பரவசத்துடன் கோவிந்தா, கோவிந்தா என, சுவாமி தரிசனம் செய்தனர்.