பதிவு செய்த நாள்
30
டிச
2017
05:12
குளித்தலை: குளத்தலை, கிருஷ்ணராயபுரம் பெருமாள் கோவில்களில், சொர்க்க வாசல்
திறப்பு கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
குளித்தலை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அருகே, டவுன் ஹால் தெருவில் உள்ள
நீலமேக பெருமாள் கோவிலில், டிச. 29-ல், அதிகாலை, 5:45 மணியளவில், சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில், குளித்தலை சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் கோவில் குடிபாட்டு க்கார்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், வைகைநல்லூர் அக்ராஹாரத்தில் உள்ள லட்சுமி நாரண பெருமாள் கோவிலில், அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
குளித்தலை டி.எஸ்.பி., முத்துகருப்பன் உத்தரவின் படி, இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலை மையில், போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
* கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள, லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், வைகுண்ட
ஏகாதசி விழா முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை, 5:30 மணியளவில், பரமபத வாசல் திறக்கப்பட்டது. லட்சுமி நாராயண மூர்த்தி, நர்த்தன கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில், சொர்க்க வாசல் வழியாக வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், கிருஷ்ணராயபுரம் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.