பதிவு செய்த நாள்
01
ஜன
2018
03:01
சென்னை : தர்மசாஸ்தா திருக்கல்யாண மகோற்சவம், தி.நகர், காந்திமதி கல்யாண மண்டபத்தில், இன்று நடக்கிறது. அய்யப்ப பக்தர்களால், 32 ஆண்டுகளாக, தர்மசாஸ்தா திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, 33வது, திருக்கல்யாண உற்சவமும், சென்னையில், எட்டாவது திருக்கல்யாண உற்சவமும், தி.நகர், வடக்கு போக் ரோடு, காந்திமதி கல்யாண மண்டபத்தில், இன்று நடத்தப்படுகிறது. இதை முன்னிட்டு, நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. மாலை, 3:00 மணிக்கு சம்பிரதாய பஜனை, கணேசாதி தியானங்கள் நடத்தப்பட்டன. நேற்று இரவு, 7:00 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. திருக்கல்யாண வைபவமான, இன்று காலை, 8:00 மணி முதல் உஞ்சவிருத்தி, தோடக மங்களம், திவ்யநாமம் நடக்கிறது. காலை, 10:30 மணியில் இருந்து, 12:00 மணி வரை பூர்ணா, புஷ்களாம்பாள் சமேத தர்ம சாஸ்தா திருக்கல்யாண மகோற்சவம் நடக்கிறது.