பதிவு செய்த நாள்
01
ஜன
2018
03:01
போளிவாக்கம் : போளிவாக்கம் சத்திரம் கிராமத்தில், ஒன்பது குண்டங்களுடன் காயத்ரி மகா யாகம் நேற்று நடந்தது. கடம்பத்துார் ஒன்றியம், போளிவாக்கம் ஊராட்சிக்குட்பட்டது போளிவாக்கம் சத்திரம் கிராமம். திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த ஊராட்சிக்குட்பட்ட ஒன்றிய தொடக்கப் பள்ளி மைதானத்தில், திருவள்ளூர் காயத்ரி பரிவார் சார்பில், ஒன்பது குண்டங்கள் அமைக்கப்பட்டு, காயத்ரி மகா யாகம் நேற்று நடந்தது. நேற்று, காலை, 9:30 மணிக்கு துவங்கிய இந்த காயத்ரி மகா யாகம், பகல், 1:00 மணிக்கு நிறைவு பெற்றது. அதை தொடர்ந்து, காயத்ரி மகா யாகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு சமபந்தி போஜனம் நடந்தது. அதேபோல், பிரதி வியாழக்கிழமை தோறும் திருவள்ளூர் அடுத்த, மணவாள நகர், கன்னைய நகரில் உள்ள மங்களீஸ்வரர் கோவிலில், காலை, 11:30 மணி முதல், பிற்பகல், 1:30 மணி வரை, காயத்ரி மகா யாகம் நடைபெறும் என, திருவள்ளூர் காயத்ரி பரிவார் அமைப்பினர் தெரிவித்தனர்.