பதிவு செய்த நாள்
02
ஜன
2018
01:01
வால்பாறை: வால்பாறையில் உள்ள கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புத்தாண்டையொட்டி, நேற்று காலை, 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. அண்ணாநகர் மாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன்கோவில், வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி கோவில், காமாட்சியம்மன்கோவில், கருமலை பாலாஜிகோவில், சோலையார் சித்திவிநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. வால்பாறையில் உள்ள சி.எஸ்.ஐ., தேவாலயம், ஆர்.சி.,சர்ச், சென்லுக் சர்ச், ரொட்டிக்கடை புனித வனத்துசின்னப்பர் ஆலயம், கருமலை வேளாங்கண்ணிமாதா ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஜெபக்கூட்டம் நடந்தது.