திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் ஞானானந்தா தபோவனத்தில், ஞானானந்தகிரி சுவாமிகளின் 44 வது ஆராதனையை முன்னிட்டு தீர்த்தநாராயண பூஜை நடந்தது. திருக்கோவிலுார்‚ குடமுருட்டி‚ ஞானானந்தா தபோவனத்தில்‚ ஞானானந்தகிரி சுவாமிகளின் 44 வது ஆண்டு ஆராதனை விழா‚ கடந்த மாதம் 20ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று ஆராதனை நடந்தது. அதிகாலை 5:30 மணிக்கு விசேஷ பாதபூஜை‚ லட்சார்ச்சனை பூர்த்தி‚ அதிஷ்டானத்தில் விசேஷ அபிஷேகம்‚ அலங்காரம்‚ மதியம் 1:15 மணிக்கு ஆராதனை‚ தீர்த்தநாராயண பூஜை‚ மகாதீபாராதனை நடந்தது.இதில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு திருச்சி தாயுமானவன் குழுவினரின் பக்தி இசை கச்சேரி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.