பதிவு செய்த நாள்
04
ஜன
2018
01:01
கன்னிவாடி:வெல்லம்பட்டி மாரிமுத்து சித்தர் கோயிலில், தீர்த்தாபிேஷகத்துடன் குருபூஜை விழா நடந்தது. கசவனம்பட்டி அருகே வெல்லம்பட்டியில், பிரசித்திபெற்ற மாரிமுத்து சித்தர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை புனர்பூச நட்சத்திரத்தில், சுவாமியின் குருபூஜை நடக்கிறது. இந்தாண்டு திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், காசி, ராமேஸ்வரம், சதுரகிரி உள்ளிட்ட இடங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில் அருகே மெய்கண்ட சித்தர் குகையில் இருந்து வேதி தீர்த்த அழைத்து வரப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குருபூஜையில், தீர்த்த, பால் கலசங்களுடன் கிராம விளையாடல் நடத்தப்பட்டு, மூலவருக்கு தீர்த்தாபிேஷகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதை நடந்தது. விழாவை முன்னிட்டு தொடர் அன்னதானம், திருவாசக முற்றோதல், தேவார பாராயணம் நடந்தது.