பதிவு செய்த நாள்
04
ஜன
2018
01:01
வேலூர்: வேலூர், திருமலைக்கோடி ஓம் சக்தி நாராயணி பீடம் சக்தி அம்மாவின், 42வது ஜெயந்தி விழா, நேற்று காலை நடந்தது. இதையொட்டி, சக்தி அம்மாவுக்கு, வெளிநாட்டு பக்தர்கள் பாத பூஜை செய்தனர். தொடர்ந்து, சக்தி அம்மா, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். பின், வேலூர் அஞ்சல் துறை கண்காணிப்பாளர் விஜயா, சக்தி அம்மாவின் உருவம் அடங்கிய, ஐந்து ரூபாய் தபால்தலையை வெளியிட்டார். இதில், கலவை சச்சிதானந்த சுவாமிகள், வாலாஜாபேட்டை முரளிதர சுவாமிகள், கோவை காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், திருவலம் சாந்தா சுவாமிகள், நுகர்வோர் குறை தீர்வு நீதிபதி தமிழ்வாணன், வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.