பதிவு செய்த நாள்
05
ஜன
2018
12:01
ஆம்பூர்: தமிழகத்தில், கோவில்களை விட்டு, அரசு வெளியேற வேண்டும், என, பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
இதுகுறித்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், சோமாஸ்கந்தர் விக்ரகம் செய்வதற்கு, ஐந்தே முக்கால் கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், ஒரு குண்டு மணி தங்கம் கூட பயன்படுத்தப்படவில்லை. குடமுழுக்கு செலவு என்று கூறி, நன்கொடை வசூலிக்கின்றனர். ஆனால், இதில் ஒரு பகுதி மட்டும் செலவிடப்படுகிறது. நன்கொடைக்கு ரசீதும் போடுவதில்லை. தமிழக அரசு, கோவில்களை அழிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. எனவே, கோவில்களை விட்டு, அரசின் அறநிலையத்துறை வெளியேற வேண்டும். ஆன்மிகம் இல்லாத திராவிட கட்சிகளின் அரசியல் இருக்கும் போது, ரஜினியின் ஆன்மிக அரசியல் ஏன் இருக்கக் கூடாது? இவ்வாறு அவர் கூறினார்.