பதிவு செய்த நாள்
05
ஜன
2018
12:01
ஊத்துக்கோட்டை:மகா கால பைரவர் கோவிலில், 8ம் தேதி, தேய்பிறை அஷ்டமி நாளை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது மகா கால பைரவர் கோவில். இக்கோவில், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இங்கு நடைபெறும் விழாக்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை சிறப்பு வாய்ந்தது.
மாதம் ஒருமுறை வரும் இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்வர். இந்த ஆண்டின் முதல் தேய்பிறை அஷ்டமி நாள், 8ம் தேதி வருகிறது. அன்று காலை, மூலவர் கால பைரவருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும். தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்படும்.