பதிவு செய்த நாள்
11
ஜன
2018
01:01
பவானிசாகர்: பவானிசாகர் அடுத்துள்ள, பெரியார் நகரில் சின்ன பண்ணாரியம்மன் கோவில் ஆண்டு விழாவை முன்னிட்டு, நேற்று காலை, 8:00 மணிக்கு புங்கார், பவானி ஆற்றிலிருந்து, அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி துவங்கியது. பக்தர்கள், புனித தீர்த்தக்குடம் எடுத்துக் கொண்டு, கோவிலில் ஊற்றி சிறப்பு வழிபாடு பூஜை செய்தனர். கிரேனில் பறவைக்காவடி எடுத்து வந்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் உட்பட, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அக்னிகுடம், கரகம் எடுத்தபடியும், அலகு குத்தி, தேர் இழுத்தும் அம்மனை வழிபட்டனர். மதியம், அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. முன்னதாக நேற்று முன்தினம், பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து, தேர் புறப்பட்டு சின்னபண்ணாரியம்மன் கோவிலை வந்தடைந்தது.