பதிவு செய்த நாள்
11
ஜன
2018
12:01
காங்கேயம்: சிவன்மலை, தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை, தைப்பூச தேர்த்திருவிழா பலதுறை அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து, சிவன்மலை உதவி ஆணையர் கண்ணதாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காங்கேயம் வட்டம், சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வரும், 31, பிப்.,1,2 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள, தைப்பூசத் தேர்த்திருவிழா தொடர்பாக, அந்தந்த துறை சார்பாக செய்யப்படவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, ஆலோசிக்க ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நாளை (ஜன.12) சிவன்மலை கோவில் திருமண மண்டபத்தில் மதியம், 12:00 மணிக்கு நடைபெற உள்ளது. பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.