ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, அம்மன் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜன 2018 11:01
ராமேஸ்வரம்: தைப்பொங்கல் விழாவையொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலா வந்து, பக்தருக்கு காட்சியளித்தார். தைப்பொங்கல் விழாவான நேற்று, ராமேஸ்வரம் கோயிலில் காலையில் நடந்த ஸ்படிகலிங்க பூஜை, காலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இப்பூஜை முடிந்ததும் கோயிலில் இருந்து சுவாமி,அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தளினர். பின் கோயில் குருக்கள் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடத்தி, கூடியிருந்த பக்தருக்கு தீர்த்தம் வாரி கொடுத்தனர். இதனையடுத்து பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களையும் நீராடினர்.