பதிவு செய்த நாள்
15
ஜன
2018
01:01
சேலம்: ஐயப்பா ஆசிரமத்தில், மகரஜோதி தரிசனம் கோலாகலமாக நடந்தது. சேலம், பெங்களூரு பைபாஸில் உள்ள ஐயப்பா ஆசிரமத்தில், கடந்த டிச., 28ல் மகர விளக்கு பூஜை தொடங்கியது. இதில், சுவாமிக்கு தினமும் புஷ்ப அலங்காரம், மகா தீபாராதனை மற்றும் இசை கச்சேரி நடந்தது. இதில், முக்கிய நிகழ்ச்சியான மகரஜோதி தரிசனம் முன்னிட்டு, நேற்று மாலை, செல்வ விநாயகர் கோவிலிலிருந்து, கேரள பஞ்ச வாத்தியம் முழங்க, திரு ஆபரண பெட்டியை, பக்தர்கள் ஊர்வலம் எடுத்துவந்து, சிறப்பு பூஜைக்கு பின், ஐயப்பனுக்கு சாத்தினர். இதில், ஏராளமானோர் சுவாமியை தரிசித்தனர்.
* பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம், ஸ்ரீநகர் ஐயப்பா ஆசிரமத்தில், நேற்று காலை கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம் நடந்தது. மாலை, மகா தீபாராதனையை தொடர்ந்து, ஏற்காடு கோட்டக்கல் முனியப்பன் கோவிலில், ஜோதி தரிசனம் நடந்தது. ஏற்பாடுகளை, அகில பாரத ஐயப்பா சேவா சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.