Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன? அஷ்ட சூரியதேவர்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பணத்தை பார்க்காதே... குணத்தை மட்டும் பார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2018
02:01

* மனிதன் மற்றவருடைய குணத்தை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவரிடம் இருக்கும் பணத்துக்காக மதிப்பது கூடாது.
* மழையை எதிர்பார்த்து உயிர்கள் வாழ்வது போல மக்கள்  நேர்மையானவர்களின்
நல்லாட்சியை எதிர்பார்த்து வாழ்கின்றனர்.
* என் வீடு, நாட்டையும் மேன்மை அடைய செய்வேன் என்னும் உறுதியுடையவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்தி  கொண்டு உதவ முன் வரும்.
* துன்பம் வரும் போது தாங்குவதற்கு நல்ல பிள்ளைகள் இல்லாத வீடும், நாடும் அடிப்பகுதியை வெட்டினால் சாயும் மரம் போல் விழுந்து விடும்.
* குளத்தில் உள்ள தாமரை மலரின் தண்டு,  நீரின் ஆழத்திற்கேற்ப வளர்வது போல, ஒருவரின் உயர்வு அவரின் முயற்சிக்கேற்ப இருக்கும்.
* பிறருக்கு உதவுபவர்கள் வறுமையுடன் இருப்பது கொடுமையானது. பிறருக்கு தீங்கு செய்பவர்கள் செல்வ வளத்துடன் இருப்பது கொடுமையிலும் கொடுமையானது.
* எதிரியை விட பொறாமையால் தான் ஒருவருக்கு அதிகமாக துன்பம் வருகிறது.
இந்த குணம் எப்போதும் கொஞ்சம் கூட நன்மை தராது.
* எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொல்வது போல, அன்பு இல்லாத உயிர்களை அறக்கடவுள் காய்ந்து கொல்வார்.
* இன்பம் தரும் இனிய சொற்களை விட்டு,  துன்பம் தரும் தீய சொற்களை கூறுவது, நல்ல பழம் இருக்க காய்களை உண்பது போலாகும்.
* ஒருவர் செய்த உதவியை ஒருபோதும் மறப்பது கூடாது. அவர் செய்த கெடுதலை நினைக்கவே கூடாது.
* நல்லவனிடம் சேரும் பணம், இனிய பழங்கள் நிறைந்த மரம் ஊரின் நடுவில் வளர்ந்தது போல, பலருக்கும் பயன்படும்.
* நல்ல மனைவி அமைந்து விட்டால், ஒருவனது வாழ்விற்கு தேவையான
எல்லாம் நாடி வந்து விடும்.
* ஒரு பிறவியில் ஒருவன் பெற்ற கல்விச் செல்வம், ஏழேழு பிறவிக்கும் தொடர்ந்து வந்து பாதுகாப்பு அளிக்கும்.
* வெற்றியை அடைய விரும்புபவன், சிறிதும் மனச்சோர்விற்கு இடம் கொடுக்காமல் காலத்தை எதிர்பார்த்து காத்திருப்பான்.
*  ஆடை அவிழ்ந்தால், கை அதை விரைந்து சரி செய்வது போல, துன்பத்தை துடைக்க ஓடி வருபவனே உண்மையான நண்பன்.
* பிறருக்கு சொந்தமான ஒன்றை, திருட வேண்டும் என மனதால் நினைப்பது கூட பெரும்பாவம்.
* உடலில் வெளிப்புறத்தை நீரால் தூய்மைப் படுத்தலாம். ஆனால் உள்ளத்தை  உண்மை ஒன்றே தூய்மையாக்கும்.
*  நற்குணம் கொண்டவன் என்று பெருமையுடன் வாழ விரும்பினால், பொறுமையை வாழ்வில் வளர்த்துகொள்ள வேண்டும். திருப்பூர் கிருஷ்ணன்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar